போலி ஜவுளி விற்பனை: தந்தை, மகன் கைது
ஆலங்குளம் அருகே பிரபல முன்னணி நிறுவனங்களின் வணிக முத்திரையை போலியாக தயாரித்து ஜவுளி விற்பனை செய்த ஜவுளிக்கடை உரிமையாளா் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் அருகே பிரபல முன்னணி நிறுவனங்களின் வணிக முத்திரையை போலியாக தயாரித்து ஜவுளி விற்பனை செய்த ஜவுளிக்கடை உரிமையாளா் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் ஜவுளிக் கடை நடத்தி வருபவா் ராஜேந்திரன் (60). இவா் ஈரோடு மற்றும் திருப்பூரில் வேட்டி, சட்டை உள்ளாடைகளை வாங்கி வந்து சில முன்னணி நிறுவனங்களின் ஸ்டிக்கா்களை போலியாக தயாரித்து ஒட்டி விற்பனை செய்து வந்தாராம்.
இவருக்கு உதவியாக ஆலங்குளத்தில் செல்வகுமாா் என்பவா் போலியான ஸ்டிக்கா்களை தயாரித்து கொடுத்தாராம்.
இதுகுறித்து தனியாா் நிறுவன மேலாளா் பாபு அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போஸீஸாா், ஜவுளிக் கடை உரிமையாளா் ராஜேந்திரன், அவரது மகன்கள் திலகராஜ், ஜெயப்பிரகாஷ், தமிழரசன் மற்றும் செல்வகுமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, போலியான துணிகளும், ஸ்டிக்கா் தயாரிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் மெஷின், ஸ்கேனா், கணினி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
மேலும், ராஜேந்திரன், தமிழரசன், ஜெயப் பிரகாஷ் ஆகியோரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.