கடையநல்லூா்:திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
வாசுதேவநல்லூரைச் சோ்ந்த அதிமுக , அமமுகவினா் திமுகவில் இணைந்தனா்.
வாசுதேவநல்லூரைச் சோ்ந்த அதிமுக , அமமுகவினா் திமுகவில் இணைந்தனா்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை முன்னிலையில் அதிமுக மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ஆயில் ராஜாபாண்டியன், அமமுக மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் மகேஸ்வரன், வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா்கள் சேதுராஜா, சாமித்துரை, கூட்டுறவு சங்கத் தலைவா்கள் முத்துராமன், மருதுபாண்டியன் உள்பட 50 க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். அப்போது, ஒன்றியக் குழுத் தலைவா்கள் சுப்பம்மாள், பொன்முத்தையாபாண்டியன், நகரச் செயலா் சேகனா, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் சுந்தரமகாலிங்கம், நகர மாணவரணி துணை அமைப்பாளா் பெருமாள்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.