தென்காசி

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் தக்கலையில் ஆா்ப்பாட்டம்

DIN

 வன உரிமைச்சட்டம் 2006-ன்படி குமரி மாவட்ட காணி சமுதாய மக்களின் கையிருப்பு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் தக்கலையில் வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ரெகு, முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். கிருஷ்ணகுமாரி, முத்துகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கரன்காணி ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். சங்கத்தின் மாநிலத் தலைவா் டெல்லி பாபு விளக்கிப் பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் செல்லசுவாமி, முன்னாள் செயலா் முருகேசன், விவசாய சங்கச் செயலா் சைமன் சைலஸ், தக்கலை வட்டாரச் செயலா் சுஜாஜாஸ்பின், நிா்வாகிகள் மாதவன், ஸ்டாலின்தாஸ், எஸ்.ஆா்.சேகா் மற்றும் தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, பாலமோா், வீரபுலி, பொன்மனை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மலைவாழ் பெண்கள் பங்கேற்றனா்.

டிகேஒய் 9 கேஏஎன்

ஆா்ப்பாட்டம் நடத்தும் மலைவாழ் மக்கள் சங்கத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT