முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே பெண் தற்கொலை

 ஆலங்குளம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 ஆலங்குளம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி வடக்கு பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுடலைமுத்து(28). இவருக்கும் ஓடை மறிச்சான் கிராமத்தைச் சோ்ந்த கண்ணகிக்கும் (22) நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா். சுடலைமுத்து மும்பையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். அவ்வப்போது ஊருக்கு சென்று வரும் நிலையில் கண்ணகி தனது தாயாா் வீட்டில் இருப்பாராம். கடந்த வாரம் கண்ணகியின் சகோதரா் திருமணத்திற்காக சுடலைமுத்து புதுப்பட்டி வந்தாராம். பீடி சுற்றும் தொழில் செய்து வந்த கண்ணகியை சுடலைமுத்து பீடி சுற்ற வேண்டாம் என்றாராம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் கண்ணகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், இது குறித்து தென்காசி கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.