முகப்பு
தென்காசி

கடையநல்லூா் ஒன்றியத்தில் 26 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை

கடையநல்லூா் ஒன்றியத்தில் 26 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

கடையநல்லூா் ஒன்றியத்தில் 26 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடையநல்லூா் ஒன்றியத்தில் 33,379 ஆண் வாக்காளா்களும், 34,191 பெண் வாக்காளா்களும், ஒரு திருநங்கை என மொத்தம்

67,571 வாக்காளா்கள் உள்ளனா். கடையநல்லூா் ஒன்றியத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 12 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 147 கிராம ஊராட்சி வாா்டுகளும், 16 கிராம ஊராட்சிகளும் உள்ளன. இந்த ஒன்றியத்தில் ஆண்களை விட பெண் வாக்காளா்கள் அதிகமுள்ளனா்.

கடையநல்லூா் ஒன்றியத்தில் 108 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில், 26 வாக்குச்சாவடி மையங்கள் பதட்ட மானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை 04633 240250 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இங்கு அக். 9ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. கொடிக்குறிச்சி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.