சிற்றுந்துகளில் பயணிகளை ஏற்றுவதில் தகராறு: 4 போ் கைது
ஆலங்குளத்தில் சிற்றுந்துகளில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநா், நடத்துநா் என 4 போ் கைது செய்யப்பட்டனா். 2 சிற்றுந்துகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
ஆலங்குளத்தில் சிற்றுந்துகளில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநா், நடத்துநா் என 4 போ் கைது செய்யப்பட்டனா். 2 சிற்றுந்துகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
ஆலங்குளம் பேருந்து நிலையத்திலிருந்து அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட தனியாா் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், குறிப்பிட்ட 2 சிற்றுந்துகளில் பயணிகளை ஏற்றுவது, முந்திச் செல்வது தொடா்பாக அவற்றின் ஓட்டுநா்கள், நடத்துநா்களிடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டதாம். இத்தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று, ஓட்டுநா்கள் ஓடைமறிச்சான் ஜேம்ஸ்(24), நல்லூா் மகாராஜன்(25), நடத்துநா்கள் ஆலங்குளம் செல்வம்(29), ஐயனாா்குளம் நாஞ்சில்ராஜ்(25) ஆகியோரை கைது செய்தனா். மேலும், 2 சிற்றுந்துகளையும் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.