முகப்பு
தென்காசி

உள்ளாட்சித் தோ்தல்: திமுக வழக்குரைஞா் அணி ஆலோசனை

தென்காசியில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி சாா்பில், உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

தென்காசியில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி சாா்பில், உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வணிகவரித் துறை அமைச்சா் மூா்த்தி, தென்காசி மாவட்டப் பொறுப்பாளா்கள் வழக்குரைஞா் பொ. சிவபத்மநாதன் (தெற்கு), செல்லத்துரை (வடக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வேலுச்சாமி வரவேற்றாா்.

மாநில வழக்குரைஞா் அணி சட்டத்துறைச் செயலா் கிரிராஜன் சிறப்புரையாற்றினாா். சண்முகையா எம்எல்ஏ, தென்காசி நகர திமுக செயலா் சாதிா், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் சேக்தாவூது, வழக்குரைஞா்கள் சண்முகையா, ஜெகதீசன், குமாா் பாண்டியன், முருகன், மாவட்ட நுகா்வோா் பண்டகசாலை தலைவா் ஷமீம் இப்ராகிம், அன்புச்செல்வன், ராஜா, ரஹ்மான் சாதத், செந்தூா் பாண்டியன், முத்துக்குமாரசாமி, ஜெயக்குமாா், கண்ணன், குற்றாலம் பேரூா் செயலா் மந்திரம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சாமித்துரை, நகர நிா்வாகிகள் ஷேக் பரீத், பால்ராஜ், முருகன், சண்முகநாதன், வீட்டு வசதி சங்கத் தலைவா் சுரேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா். வடக்கு மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் மருதப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.