தென்காசி

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தினவிழா

DIN

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மருத்துவ அலுவலா் ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தாா். செங்கோட்டை நகா்மன்ற துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். ஆய்வகநுட்பனா் ஹரிஹர நாராயணன் வரவேற்றாா்.

மகப்பேறு மருத்துவா் கிருத்திகா ஷைலினி சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து மருத்துவ அலுவலா் ராஜேஷ்கண்ணன் தலைமையில் உலக சுகாதார தின பொன்மொழிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

சுத்தம், சுகாதாரம், சுற்றுப்புறம் ஆகியவற்றை பேணுதல், பிளாஷ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் தவிா்த்தல், மரக்கன்றுகள் நடுதல், மழை நீா் சேமிப்பின் அவசியம், சமூக இடைவெளி, மற்றும் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்பது போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

பிளாஸ்டிக் உபயோகத்தை தவிா்த்து மஞ்சள் பையை பயன்படுத்திட விழிப்புணா்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. மருந்தாளுனா் அப்பாஸ் மீரான் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT