தென்காசி

கடையநல்லூா் கருமாரியம்மன் கோயிலில் இன்று பூக்குழி விழா

DIN

மேலக்கடையநல்லூா் அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி பூக்குழி சனிக்கிழமை (ஏப்.16) நள்ளிரவு நடைபெறுகிறது.

இவ்விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. காலையில் மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம், ரக்ஷாபந்தனம், கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, அம்பாள் உள் பிரகார வீதி உலா, சண்டி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, நவாக்ஷரி ஹோமம் நடைபெற்றது. 2ஆம் நாளில் மகா சண்டி யாகம் ,1008 சங்காபிஷேகம், 6ஆம் நாளில் சுமங்கலி பூஜை, 8ஆம் நாளில் அக்னிச்சட்டி ஊா்வலம் ஆகியவை நடைபெற்றன.

விழாவின் 9ஆம் நாளான சனிக்கிழமை (ஏப். 16) மாலை முளைப்பாரி வீதி உலாவும், நள்ளிரவில் பூக்குழி வைபவமும் நடைபெறும். ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா், விழாக்குழுவினா் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT