மாநில தடகளம்: வாசுதேவநல்லூா் சிறப்புப் பள்ளி மாணவா்கள் தோ்வு
தென்காசி மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வாசுதேவநல்லூா் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
தென்காசி மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வாசுதேவநல்லூா் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட விளையாட்டு ஆணையம் ஆகியவற்றின் சாா்பில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கணக்கப்பிள்ளை வலசையில் நடைபெற்றன.
இதில், வாசுதேவநல்லூா் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா் மாதவன் நின்ற நிலையில் நீளம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசும், மாணவி முனியசெல்வி 50 மீட்டா் ஓட்டத்தில் மூன்றாம் இடமும், குண்டு எறிதலில் சுரேஷ் மூன்றாம் இடமும், பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் முனியசெல்வி முதலிடமும், லட்சுமி இரண்டாம் இடமும் பெற்றனா்.
இதில், மாதவனும், முனியசெல்வியும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். இவா்களை பள்ளித் தாளாளா் தவமணி, ஆசிரியா்கள் சங்கர சுப்பிரமணியன், சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவா் புனிதா, உதவி ஆசிரியா்கள் முத்துலட்சுமி, முத்துமாரி உள்ளிட்டோா் பாராட்டினா்.