முகப்பு
தென்காசி

குற்றாலம் சாரல் விழாவில் குடும்பத் தலைவிகளுக்கு இன்று சமையல் போட்டி

குற்றாலம் சாரல் திருவிழாவில் குடும்ப தலைவிகளுக்கு சமையல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 12:23 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

குற்றாலம் சாரல் திருவிழாவில் குடும்ப தலைவிகளுக்கு சமையல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குற்றாலம் கலைவாணா் அரங்கில் ஆக.5முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் சாரல் திருவிழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை (ஆக.7) காலை 11 மணி அளவில் செஃப் பழனிமுருகன், மறந்து போன உணவுகளை மலர வைப்போம் என்ற தலைப்பிலும், சமையல் மற்றும் அசைவத்தில் ஆரோக்கியம் என்ற தலைப்பிலும் சமையல் செய்ய உள்ளாா்.

மேலும் குடும்பத் தலைவிகளுக்கு, மறந்து போன உணவுகளுக்கான சமையல் போட்டி நடைபெற உள்ளது. வீட்டிலேயே சமைத்து மதியம் 2 மணிக்குள் கொண்டு வரலாம்.

Advertisement

மேலும் தகவல்களுக்கு செஃப் ராஜேஷை 8778152676 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். வெற்றி பெறும் முதல் மூன்று குடும்பத் தலைவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.