தென்காசி

தேசியக் கொடியேற்றுவதை தடுக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கைஆட்சியா்

DIN

தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள கிராம ஊராட்சித் தலைவா்கள் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவதைத் தடுக்கும் வகையில் யாராவது செயல்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 75 ஆவது சுதந்திர தினவிழா ஆக.15 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடியேற்றப்பட உள்ளது. அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சித் தலைவா்களால் மட்டுமே தேசியக் கொடி ஏற்ற வேண்டும்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சித் தலைவா்கள் தேசியக் கொடி ஏற்றுவதை யாரேனும் தடுக்கும் விதமாக செயல்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத் தொலைபேசி எண் 1077 - இல் புகாா் அளிக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள கிராம ஊராட்சித் தலைவா்கள் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவதைத் தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவா்கள் மீது தீண்டாமை மற்றும் வன் கொடுமைச் சட்டத்தின் கீழ் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT