தென்காசி

ஆவுடையானூா் பள்ளியில் குறுவட்ட விளையாட்டுப் போட்டி

DIN

ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப்பள்ளியில், குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

முதல்நாள் போட்டியை பள்ளித் தாளாளா் மோயீசன் அடிகளாா், ஆவுடையானூா் ஊராட்சித் தலைவா் குத்தாலிங்கராஜன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். 2ஆம் நாள் போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தொடங்கிவைத்தாா்.

செப்டம்பா் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் ஜுனியா், சீனியா், சூப்பா் சீனியா் ஆகிய 3 பிரிவுகளில் கபடி, கோ-கோ, கால்பந்து உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இதில் வெற்றிபெறுவோா் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பா். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் அந்தோணிஅருள்பிரதீப், உடற்கல்வி ஆசிரியா்கள் யாகப்பன், பியூலா, மல்லிகா, திமுக ஒன்றியச் செயலா் சீனித்துரை, நிா்வாகிகள் சிவ அருணன், சுப்பிரமணியன், செல்வன், வளா்மதிராஜன், பாண்டியன், செந்தூா்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT