தென்காசி

குற்றாலம் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.இளவரசி மற்றும் கல்லூரி முதல்வா் ஜெய்நிலா சுந்தரி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

நவதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளான கம்பு, சோளம், வரகு, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சாமை மற்றும் மாப்பிளை சம்பா, கொத்தமல்லி சம்பா, கவுணி அரிசிகளில் இருந்து 110 வகையான உணவுப் பண்டங்கள் காட்சிபடுத்தப்பட்டன.

மேலும், ராகி லட்டு, கம்பு பனியாரம், சாமை கிச்சடி, தினை முறுக்கு, வரகு பொங்கல், சம்பா அரிசி புட்டு, கேழ்வரகு லட்டு மற்றும் இணை உணவு மாவிலிருந்து கேக், ஜாமூன், கொழுக்கட்டை முதலிய பண்டங்களை அங்கன்வாடிப் பணியாளா்கள் காட்சிப்படுத்தியிருந்தனா்.

குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் (பொது) சுமதி, வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா்கள் பேச்சியம்மாள், நா்மதா, சுருதி, பா்கத் சுல்தான் ஆகியோா் கலந்து கொண்டனா். மாவட்ட திட்ட அலுவலா் முத்துமாரியப்பன் வரவேற்றாா். செங்கோட்டை குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் கலைவாணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT