முகப்பு
தென்காசி

புளியங்குடியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

புளியங்குடி நகா்மன்ற உறுப்பினா் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

புளியங்குடி நகா்மன்ற உறுப்பினா் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்தாா். அதிமுக இளைஞரணி துணைச் செயலா் அ.மனோகரன் முன்னிலை வகித்தாா். புளியங்குடி நகர செயலா் பரமேஷ்வர பாண்டியன் வரவேற்றாா்.

இதில், மாவட்ட மருத்துவ அணி செயலா் துரையப்பா, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலா் சிவஆனந்த், நகா்மன்ற முன்னாள் தலைவா் சங்கரபாண்டியன், தலைமைக் கழக பேச்சாளா் லட்சுமணன், ஒன்றியக் குழு உறுப்பினா் சத்தியகலா மற்றும் வேட்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.