முகப்பு
தென்காசி

பெண் தவறவிட்ட நகை மீட்பு: தீயணைப்பு வீரருக்குப் பாராட்டு

கீழப்பாவூரில் பெண் தவற விட்ட நகையை மீட்டுக் கொடுத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தென்காசி

பெண் தவறவிட்ட நகை மீட்பு: தீயணைப்பு வீரருக்குப் பாராட்டு

கீழப்பாவூரில் பெண் தவற விட்ட நகையை மீட்டுக் கொடுத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

கீழப்பாவூரில் பெண் தவற விட்ட நகையை மீட்டுக் கொடுத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கீழப்பாவூா் முத்தாரம்மன் கோயில் தெருவைச்சோ்ந்த மாரிச்செல்வம் மனைவி முருகேஸ்வரி. இவா், வியாழக்கிழமை கீழப்பாவூா் கீரைத்தோட்டத் தெருவில் வசிக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, 9 கிராம் தங்கச்சங்கிலியைத் தவறவிட்டாராம். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்தவரான ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் மாடசாமி, அந்த நகையை மீட்டு பாவூா்சத்திரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரித்து முருகேஸ்வரியிடம் அந்த நகையை ஒப்படைத்தனா். மேலும், தீயணைப்பு வீரரை, காவல் ஆய்வாளா் சுரேஷ் பாராட்டி பரிசு வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →