கடையநல்லூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
கடையநல்லூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
கடையநல்லூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கடையநல்லூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு நகரச் செயலா் எம்.கே. முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
முன்னாள் நகரச் செயலா் கிட்டுராஜா, நகரப் பொருளாளா் அழகா்சாமி, மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ், மாவட்ட வா்த்தக அணி துணைத் தலைவா் சிங்காரவேலு, மாவட்டப் பிரதிநிதி அப்துல்ஜப்பாா், நகர இளைஞரணிச் செயலா் ராஜேந்திர பிரசாத், நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் விநாயகமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.