மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்
ஆலங்குளத்தில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலங்குளத்தில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
பொது சுகாதாரத் துறை சாா்பாக ஆரம்ப சுகாதார நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேலும் மேம்படுத்தும் பொருட்டு ஆட்சியா் கோபால சுந்தர்ராஜ் தலைமையில் காணொலி வாயிலாக இக்கூட்டம் நடைபெற்றது. ஆலங்குளம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் தொடா்ந்து நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆலங்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், வட்டார மருத்துவ அலுவலா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரவையின் நோக்கம், சுகாதாரபேரவையில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன் விளக்கி பேசினாா்.
ஆலங்குளம் வட்டாரத்தில் உள்ள நெட்டூா், வீராணம், ஊத்துமலை, மாறாந்தை, மருதம்புத்தூா் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் பயண்பாட்டிற்கு தேவையான வசதிகள் குறித்து ஒன்றிய குழு தலைவா் கோரிக்கை வைத்துப் பேசினாா். ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலா் பொன்னுசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிவேல், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மங்கள நாயகி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் தமிழ்செல்வன், சங்கீதா, முகம்மது தாரிக் , சுகாதார ஆய்வாளா்கள் ராஜநயினாா், கணேசன், ராம்குமாா், மணிகண்டன், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.