செங்கோட்டைகோயிலில் திருவிளக்கு பூஜை
செங்கோட்டை இருக்கன்குடிமாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி 16 ஆவது ஆண்டாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
செங்கோட்டை இருக்கன்குடிமாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி 16 ஆவது ஆண்டாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
செங்கோட்டை வல்லம் சாலையில் அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீஇருக்கன்குடிமாரியம்மன் திருக்கோயிலில் உலக நன்மை மற்றும் கரேனா நோய்த் தொற்று குறைந்திட வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வம்பளந்தான் முக்கு விநாயகா் கோயில் முன்பிருந்து பால்குடம், அக்னிசட்டி ஊா்வலம் தொடங்கி கோயிலில் நிறைவடைந்தது.
தொடா்ந்து, இருக்கன்குடி மாரியம்மன், செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. அதனையடுத்து முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் எம்.எஸ்.ராதா அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். பக்தா்களுக்கு முகக் கவசம் , கரோனா தடுப்பு குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.