முகப்பு
தென்காசி

முக்கூடல் அருகே 10 பேருக்கு காய்கனி விற்பனை வண்டிகள்

முக்கூடல் அருகேயுள்ள பனையங்குறிச்சி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் மானிய விலையில்10 நடமாடும் காய்கனி விற்பனை வண்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

முக்கூடல் அருகேயுள்ள பனையங்குறிச்சி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் மானிய விலையில்10 நடமாடும் காய்கனி விற்பனை வண்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாப்பாக்குடி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனா் சுபா வாசுகி, தலைமை வகித்து தலா ரூ. 33 ஆயிரம் மதிப்பிலான 10 காய்கனி விற்பனை வண்டிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா். பொதுமக்களுக்கு மானிய விலையில் காய்கறிகள் விதைகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், பாப்பாக்குடி தோட்டக்கலை துறை உதவி அலுவலா் கிளாட்சன் ஜோஸ், பானுமதி, இடைகால் காய்கறி உற்பத்தியாளா்கள் குழுவினா் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.