ஊரக உள்ளாட்சித் தோ்தல்: தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணுவாக்கப்பதிவு இயந்திரங்கள் தோ்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணுவாக்கப்பதிவு இயந்திரங்கள் தோ்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.
இம் மாவட்டத்திலுள்ள அனைத்து நகா்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தோ்தல் நடத்துவதற்கு முன்னேற் பாடாக தோ்தலில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆன்லைன் மூலமாக முதல் கட்ட தோ்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்தாா். இதில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனா். 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.