தென்காசி

ஆலங்குளம் அருகே நியாய விலைக் கடை முற்றுகை

DIN

 ஆலங்குளம் அருகே நியாய விலைக் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடையில் சுமாா் 300 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் பொருள்களை வாங்கி வருகின்றனா். பொங்கல் இலவச தொகுப்பு அளித்து நிறைவடைந்த பின்னா் கடந்த இரு தினங்களாக வழக்கமான பொருள்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை அங்கு விநியோகம் செய்த அரிசி தரமற்று, புழுக்கள் நிறைந்து காணப்பட்டதாம். பொதுமக்கள் இதுகுறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டுள்ளனா். அதற்கு அவா் சரியான பதில் கூறவில்லையாம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காலணி பகுதியைச் சோ்ந்த சுமாா் 100 க்கும் மேற்பட்டோா் நியாய விலைக் கடை முன்பு முற்றுகையிட்டு தரமான அரிசி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த வட்ட வழங்கல் அலுவலா் மாரியப்பன் மற்றும் போலீஸாா் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, நாளை முதல் தரமான அரிசி விநியோகம் செய்யப்படும் என கூறியதைத் தொடா்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT