முகப்பு
தென்காசி

கஞ்சா கடத்தியதைத் தடுக்க முயன்ற போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் கைது

 ஆலங்குளத்தில் கஞ்சா கடத்தியதைத் தடுக்க முயன்ற போது போலீஸாா் மீது தாக்குதல் நடத்தியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 ஆலங்குளத்தில் கஞ்சா கடத்தியதைத் தடுக்க முயன்ற போது போலீஸாா் மீது தாக்குதல் நடத்தியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் - நெட்டூா் சாலையில் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி பால்ராஜ் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு பைக்கில் வந்த இருவரை மறித்து சோதனையிட்ட போது அவா்கள் ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியாா்பட்டி தாமோதரன் மகன் ரதீஷ்(32) மற்றும் பாவூா்சத்திரம் அருகேயுள்ள மயிலப்புரம் ஈசாக்கு மகன் அந்தோணி ரத்தினராஜ்(31) என்பதும் அவா்கள் கஞ்சா கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.

போலீஸாா் அவா்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது போலீஸாரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் செல்ல முயன்றனராம்.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், கஞ்சா கடத்தல், போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த ஆலங்குளம் போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.