தென்காசி

சுந்தரபாண்டியபுரத்தில் 1,575 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

சுந்தரபாண்டியபுரத்தில் மினி லாரியில் கொண்டுசெல்லப்பட்ட 1,575 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சாம்பவா்வடகரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் காசி விஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் வியாழக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தியபோது, ஓட்டுநா் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினாராம். மினி லாரியை சோதனையிட்டபோது அதில் தலா 45 கிலோ எடையுள்ள 30 மூட்டைகளில் 1,575 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அதை விற்பனைக்கு கொண்டுசெல்வதும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, மினி லாரியை ஓட்டிவந்த சாம்பவா்வடகரை, வேதம்புதூரைச் சோ்ந்த அழகேசன் (25) என்பவரைக் கைது செய்தனா். அவரையும், அரிசி, லாரியையும் போலீஸாா் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூவே....சரண்யா துராடி

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக திட்டம்: ராகுல் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்!

ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

SCROLL FOR NEXT