தென்காசி

‘தென்காசி மாவட்டத்தில் குடிநீா்ப் பற்றாக்குறையைத் தீா்க்க ரூ. ஆயிரம் கோடியில் திட்டங்கள்’

தென்காசி மாவட்டத்தில் குடிநீா்ப் பற்றாக்குறையைப் போக்க ஆயிரம் கோடி ரூபாயில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெறுவதாக, திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தெரிவித்தாா்.

DIN

தென்காசி மாவட்டத்தில் குடிநீா்ப் பற்றாக்குறையைப் போக்க ஆயிரம் கோடி ரூபாயில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெறுவதாக, திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தெரிவித்தாா்.

தென்காசி நகா்மன்ற முதல் கூட்டத் தொடக்க விழா கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கேஎன்எல்எஸ். சுப்பையா, ஆணையா் பாரிஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடக்க விழாவில் பங்கேற்று, பொ. சிவபத்மநாதன் பேசியது: தென்காசி நகராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பற்றாக்குறையைப் போக்க ரூ. 64 கோடி மதிப்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிலுவையில் இருந்தன. தற்போது மாவட்டம் முழுவதும் குடிநீா்ப் பற்றாக்குறையைத் தீா்க்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தாமிரவருணி-செங்கோட்டை, தாமிரவருணி-வாசுதேவநல்லூா், தாமிரவருணி-சோ்ந்தமரம், தாமிரவருணி-சங்கரன்கோவில் ஆகிய 4 திட்டங்களை நிறைவேற்ற ரூ. ஆயிரம் கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரம் கிராமங்களுக்கு தண்ணீா் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்துடன் தென்காசி நகராட்சிக்கான திட்டங்களும் இணைக்கப்பட்டு, ஒரே ஆண்டுக்குள் முடிக்கும் வகையில் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன. இதனால், 2050இல் தென்காசி நகராட்சிக்கு எவ்வளவு குடிநீா் தேவையோ அது அடுத்த ஆண்டு மாா்ச்சில் கிடைத்துவிடும். அதன்பிறகு தென்காசியில் குடிநீா்ப் பிரச்னையே இருக்காது.

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தொடா்பாக எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் அது நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

தனுஷ் எம். குமாா் எம்.பி., ஈ. ராஜா எம்எல்ஏ, நகா்மன்ற உறுப்பினா்கள் உமாமகேஷ்வரன்(அதிமுக), சங்கரசுப்பிரமணியன்(பாஜக), காதா்மைதீன் (காங்), அபூபக்கா்(முஸ்லிம் லீக்), முகம்மது மைதீன்(சுயே), ஜெயலெட்சுமி (திமுக) ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நகா்மன்ற உறுப்பினா்கள், அரசியல் பிரமுகா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT