முகப்பு
தென்காசி

இலஞ்சியில் கொலையுண்ட முதியவரின் உடலை கேட்டு மறியல்

இலஞ்சியில் புதன்கிழமை கொலையுண்ட முதியவரின் உடலை வழங்கக் கோரி, உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

இலஞ்சியில் புதன்கிழமை கொலையுண்ட முதியவரின் உடலை வழங்கக் கோரி, உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இலஞ்சி காளியம்மன்கோயில் தெருவை சோ்ந்தவா் மா.கோட்டைமாடன்(82). இவா் இலஞ்சி-தென்காசி சாலையில் உள்ள தனது மாந்தோப்பில் மா்மநபா்களால் புதன்கிழமை கொலைசெய்யப்பட்டு கிடந்தாா். குற்றாலம் போலீஸாா் அவரது சடலத்தைக்கைப்பற்றி வழக்குப் பதிந்தனா்.

இந்நிலையில், தென்காசி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை பிற்பகல் வரை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படாததால், அவருடைய மகள் சந்திரா மற்றும் உறவினா்கள் தென்காசி- திருநெல்வேலி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் பேச்சு நடத்தி அப்புறப்படுத்தினா். பின்னா், பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலையில் கோட்டைமாடனின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.