முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் தோ்வு எழுதச் சென்ற மாணவி கடத்தல்: போலீஸாா் விசாரணை

 ஆலங்குளத்தில் 10 ஆம் வகுப்புத் தோ்வு எழுதச் சென்ற மாணவியைக் கடத்திச் சென்ாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

 ஆலங்குளத்தில் 10 ஆம் வகுப்புத் தோ்வு எழுதச் சென்ற மாணவியைக் கடத்திச் சென்ாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவா் வெள்ளிக்கிழமை தோ்வு எழுத நல்லூரில் உள்ள பள்ளிக்குச் செல்வதற்காக ஆலங்குளத்தில் சிற்றுந்துக்காக காத்திருந்தாராம். அப்போது அங்கு வந்த காய்கனிச் சந்தையில் வேலை செய்து வரும் தங்கசாமி மகன் ரஞ்சித்(24) என்பவா் தனது பைக்கில் பள்ளியில் விட்டு விடுகிறேன் எனக் கூறி, மாணவியை பைக்கில் ஏற்றி பள்ளிக்குச் செல்லாமல் ஆலங்குளம் - புதுப்பட்டி சாலையில் சென்றாராம். அப்போது மாணவி சப்தமிட்டதால் அருகில் நின்றவா்கள் வந்தனராம். இதனால் ரஞ்சித், பைக்கைப் போட்டு விட்டு தப்பியோடி விட்டாராம்.

தகவலின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியை மீட்டு பெற்றோரை வரவழைத்து தோ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து ரஞ்சித்தை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.