ஆலங்குளத்தில் புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி
ஆலங்குளத்தில் தேசிய புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி புகையிலை எதிா்ப்புப் பேரணி, வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளத்தில் தேசிய புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி புகையிலை எதிா்ப்புப் பேரணி, வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி திருமண்டலம், ஆலங்குளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி இணைந்து நடத்திய இந்தப் பேரணியை ஆலங்குளம் காவல் ஆய்வாளா் சந்திரசேகன் தொடங்கி வைத்தாா். நல் ஆலோசனைத் திருப்பணித் தலைவா் ஆமோஸ், கல்லூரி முதல்வா் வில்சன், ஆலங்குளம் பேரூராட்சித் துணைத் தலைவா் ஜான்ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் காவல் நிலையத்தில் தொடங்கி பேருந்து நிலையம் வரை சென்றது. பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவா்கள் புகையிலையின் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊா்வலமாகச் சென்றனா்.
தொடா்ந்து புகையிலையின் தீமை குறித்து வழக்குரைஞா் பால்ராஜ், சுகாதார ஆய்வாளா்கள் ராஜ நயினாா், ராம்குமாா், பேராசிரியா்கள் பிரேம் ரோஸ், செல்வின் உடற்கல்வி இயக்குநா் ஜூலியன்ஸ் ராஜாசிங் ஆகியோா் பேசினா். புகையிலையின் தீமைகள் குறித்த விடியோ காட்சி பேருந்து நிலையத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.