குற்றாலம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தென்காசி மாவட்டம் குற்றாலத்திலிருந்து செங்கோட்டை செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்திலிருந்து செங்கோட்டை செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குற்றாலம்-செங்கோட்டை சாலை, இலஞ்சி விலக்குப் பகுதியில் தாற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனா். இதனால் அந்தப் பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் நெடுஞ்சாலைத்துறையினா் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஏராளமான கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.