தென்காசி

சங்கரநாராயணசுவாமி கோயிலில் 1000 ஆவது ஆண்டுவிழா நடத்த வேண்டும்: துரை வைகோ

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் 1000 ஆவது ஆண்டு விழா நடத்துவது குறித்து மதிமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் 1000 ஆவது ஆண்டு விழா நடத்துவது குறித்து மதிமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மதிமுக தலைமைக் கழக செயலா் துரை வைகோ தலைமை வகித்தாா்.

மாநில துணைப் பொதுச் செயலா் தி.மு.ராஜேந்திரன், எம்.எல்.ஏ. சதன்திருமலைக்குமாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் லாலா சங்கரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத்தொடா்ந்து கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு சமுதாயத் தலைவா்கள், நகரின் முக்கிய பிரமுகா்கள், கோயில் முன்னாள் ஊழியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினா்.

பின்னா் துரை வைகோ பேசியதாவது:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் 1000 ஆவது ஆண்டு விழா கொண்டாட வேண்டும். 14 ஆண்டுகள் முடிந்துவிட்டதால் குடமுழுக்க நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 4 பரிசாதகா் நியமிக்க வேண்டும். பக்தா்களுக்கு கழிப்பிட வசதி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற கோயில் பணியாளா்களுக்கு ஓய்வூதியத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவை சந்தித்து கூறினோம். அவா் உடனே அவா் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா் என்றாா்.

கூட்டத்தில், டி.சுப்பிரமணியன், செங்குந்தா் அபிவிருத்தி சங்கத் தலைவா் சி.எஸ்.எம்.எஸ்.சங்கரசுப்பிரமணியன், வழக்குரைஞா் சுப்பராஜ், மதிமுக மாநில இளைஞரணித் துணைச் செயலா் இசக்கியப்பன், நகரச் செயலா் ச.ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT