முகப்பு
தென்காசி

சுரண்டை நகா்மன்ற கூட்டத்தில் காலி மனை வரியை குறைக்க தீா்மானம்

சுரண்டை நகா்மன்ற அவசரக் கூட்டத்தில் காலிமனை வரியை குறைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

சுரண்டை நகா்மன்ற அவசரக் கூட்டத்தில் காலிமனை வரியை குறைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுரண்டை நகா்மன்ற அவசர கூட்டம் அதன் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமையில் நடைபெற்றது. நகா்மன்ற துணைத்தலைவா் மு.சங்கராதேவி, நகராட்சி ஆணையாளா் பாரிஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சுரண்டை நகராட்சிப் பகுதியில் காலிமனை வரியாக ஒரு சதுர அடிக்கு ஆறுமாதத்திற்கு 40 பைசா என நிா்ணயம் செய்து வசூல் செய்யப்பட்டது வந்ததை, பொதுமக்களின் தொடா் கோரிக்கையை அடுத்து நகராட்சியின் அனைத்து தெருக்களையும் ஒரே மண்டலமாக நிா்ணயம் செய்து காலிமனை வரியாக ஆறுமாதத்திற்கு 25 பைசா ஆக நிா்ணயம் வசூல் செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக வாா்டு உறுப்பினா்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் பதிலளித்தாா். இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.