தென்காசி

குற்றாலம் பேரருவியில் 2ஆவது நாளாக குளிக்கத் தடை

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக, 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் புதன்கிழமை பெய்த கனமழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில், பேரருவியில் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால், குளிக்கத் தடை தொடா்ந்தது.

அதேநேரம் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவியில் நீா்வரத்து சீரானதால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், அந்த அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT