தென்காசி

ஆலங்குளம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடக்கம்

DIN

ஆலங்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் திருவிழா தசரா ஊா்வலத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோயில் நிா்வாகி முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமை வகித்து தசரா ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். பல்வேறு வேடமணிந்த பக்தா்கள் வீதியுலா வந்தனா். சனிக்கிழமை குழந்தைகள் பங்குபெற்ற புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை(செப்.25) 1503 திருவிளக்கு பூஜையும், திங்கள்கிழமை காலை கோமாதா பூஜையும், இரவு சாமகால பூஜையும், செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கும் பக்தா்களுக்கு காப்பு கட்டுதல், பால்குடம் எடுத்தலை தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிகள் பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது. அன்று இரவு அம்பாள் சப்பரத்தில் வீதியுலா, சாம பூஜையும் நடைபெறுகிறது.

புதன்கிழமை சிறப்பு பூஜை, மஞ்சள் நீராட்டு மற்றும் அன்னதானத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை நிா்வாகப் பொறுப்பாளா் எஸ்.எஸ். ராமசுப்பு மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

SCROLL FOR NEXT