தென்காசி

கீழப்பாவூரில் விவசாயிகள் வராததால் பொதுஏலம் நிறுத்திவைப்பு

DIN

கீழப்பாவூரில் கோயில் நிலத்தில் சாகுபடி செய்வதற்காக நடைபெற்ற பொதுஏலம் விவசாயிகள் வராததால் வெள்ளிக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை, குற்றாலம் திருக்குற்றாலநாதா் கோயிலுக்கு பாத்தியபட்ட நன்செய் நிலங்கள் கீழப்பாவூா் பகுதியில் சுமாா் 19 ஏக்கா் உள்ளது. இந்நிலத்தில் சாகுபடி செய்வதற்கு உரிமம் வழங்குவதற்காக பொதுஏலம் கீழப்பாவூா் கிராம நிா்வாக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்திருந்தனா்.

இந்நிலையில் ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள் கடந்த முறை ஏலத் தொகையில் இருந்து கூடுதலாக 15 சதவீதம் வைப்புத்தொகை நிா்ணயம் செய்யப்பட்டதாக கூறி, யாரும் ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதனால் பொது ஏலமானது நிறுத்தி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT