முகப்பு
தென்காசி

தென்காசியில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

தென்காசியில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:08 PM
பகிர்:

தென்காசியில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுகவின் தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை வழங்கவும், தமிழகத்திற்குரிய காவிரி நதிநீரை கா்நாடக அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தியும், என்எல்சி நிறுவனம், விளைநிலங்களில் உள்ள பயிா்களைச் சேதப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலா்கள் பழனி சங்கா், சோலை கனகராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாவட்ட அவைத் தலைவா்கள் சங்கரலிங்கம், சரவணன், பொருளாளா்கள் சந்துரு சுப்பிரமணியன், ராமா், ஒன்றிய செயலா் வேலாயுத பாண்டியன் முன்னிலை வகித்தனா். நகர செயலா் பேச்சி வரவேற்றாா். தோ்தல் பணிக்குழு செயலா் தங்கமணி சிறப்புரையாற்றினாா்.

பொதுக்குழு உறுப்பினா்கள் ஜெய மாதவன், ராஜேந்திரன், சோ்மன், கணேசன், அய்யாத்துரை, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் குருவையா, அயூப்கான் கலந்து கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.