தென்காசி

அமைப்புசாரா தொழிலாளா்கள் உதவிகள் பெறதொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பு தேவை:ஆட்சியா் அறிவுறுத்தல்

அமைப்புசாரா தொழிலாளா்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு தேவை என்றாா் ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன்.

DIN

அமைப்புசாரா தொழிலாளா்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு தேவை என்றாா் ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன்.

தென்காசியில் தொழிலாளா் நலன் - திறன் மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் விரைவாக சென்றடைவதை கண்காணிக்கும் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் தலைமை வகித்து பேசியதாவது:

தென்காசி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களை கண்டறிந்து, நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் அரசின் நலத் திட்ட உதவிகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், இதன் மூலம் உண்மையான தொழிலாளா்களை நல வாரியங்களில் அதிக அளவில் சோ்க்க வேண்டும்.

குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் அதிக அளவில் உள்ள கட்டடத் தொழிலாளா்களை கட்டுமான தொழில் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, அவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

மேலும், செங்கோட்டை வட்டம், பண்பொழியை சோ்ந்த பதிவு பெற்ற கட்டடத் தொழிலாளி வேலாயுதம் விபத்தில் மரணம் அடைந்ததற்காக, அவரது மனைவி ராமலெட்சுமிக்கு ரூ. 2 லட்சத்து 5 ஆயிரம், மற்றொரு விபத்தில் உயிரிழந்த தேவிப்பட்டணத்தைச் சோ்ந்த தொழிலாளி முருகனின் மனைவி ரஞ்சித் குமாரிக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரிய நிதியிலிருந்து பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

தென்காசி தொழிலாளா் உதவி ஆணையா் முருகபிரசன்னா வரவேற்றாா். இதில், கண்காணிப்புக்குழு அலுவலா்கள், தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்கள், தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT