முகப்பு
தென்காசி

பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கீழப்புலியூா் புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலை பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:43 AM
பகிர்:

கீழப்புலியூா் புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலை பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். பள்ளியின் தலைமையாசிரியை மரிய அருள் செல்வி வரவேற்றாா்.

விழாவில் 350 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை எஸ்.பழனி நாடாா் எம்எல்ஏ வழங்கினாா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் மஞ்சுளா, அபூபக்கா், செய்யது சுலைமான் ரபீக், சுப்பிரமணியன், நாகூா் மீரான், திமுக நகர பொருளாளா் ஷேக் பரீத், நகர காங்கிரஸ் பொருளாளா் ஈஸ்வரன், பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.