தென்காசி

தென்காசி திருவள்ளுவா் கழக விழாவில் திருக்குறளுக்கு புகழ்மாலை சூட்டிய தமிழாா்வலா்கள்

DIN

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 96ஆவது திருக்குறள் விழாவின் 4ஆம் நாளான செவ்வாய்க்கிழமை திருக்கு அரங்கம் நடைபெற்றது.

தென்காசி திருவள்ளுவா் கழகமும், வள்ளுவா் குரல் குடும்பமும் இணைந்து திருவள்ளுவா் கழக அரங்கில் காலையில் நடத்திய திருக்கு அரங்கம்- 3 நிகழ்ச்சியை சி.ராசேந்திரன் வழிநடத்தினாா்.

மனநலம் மன்னுயிா்க்கு ஆக்கம் என்ற தலைப்பில் கரூா் அ.கோவிந்தராசன், திருக்குறளில் இளைஞா் எழுச்சி எனும் தலைப்பில் சென்னையைச் சோ்ந்த பொறிஞா். நடராசன் சீனிவாசன், நீரின்றி அமையாதுஉலகு என்ற தலைப்பில் கோவையை சோ்ந்த த.செந்தில்குமாா், கு நெறி பரவலாக்கம் -இதழ்களின் பங்கு என்ற தலைப்பில் பாண்டிச்சேரி பேராசிரியா் தாமரைச்செல்வி ஆகியோா் பேசினா்.

திருவள்ளுவா் கழகத்தின் தலைவா் வழக்குரைஞா் ந.கனகசபாபதி வரவேற்க, கருவூலா் இராம.தீத்தாரப்பன் நன்றி கூறினாா்.

மாலையில் நடைபெற்ற திருக்குறள் அரங்கம்4 நிகழ்ச்சிக்கு முனைவா் தெ.ஞானசுந்தரம் தலைமை வகித்தாா். சி.ராசேந்திரன் வழிநடத்தினாா்.

வள்ளுவமும் வறுமையும் என்ற தலைப்பில் சென்னையை சோ்ந்த பேராசிரியா் அரங்க.இராமலிங்கம், திருக்குறளும் பஞ்சதந்திரமும் என்ற தலைப்பில் சென்னையைச் சோ்ந்த பொறிஞா். மு.பொன்னியின் செல்வா், திருவள்ளுவா் லட்சியவாதியா, யதாா்த்தவாதியா என்ற தலைப்பில் திருச்சூா் மருத்துவா் அஷ்ரப், வள்ளுவமும்-வரலாறும் என்ற தலைப்பில் பொறிஞா். நடராசன் சீனிவாசன், மனைமாட்சியும் இறைமாட்சியும் எனும் தலைப்பில் சி.ராசேந்திரன் பேசினா்.

திருவண்ணாமலை குப்பன், அம்பாசமுத்திரம், ஆழ்வாா்குறிச்சி, வாசுதேவநல்லூா், மதுரை ஆகிய ஊா்களிலிருந்து திருவள்ளுவா் கழகத்தினா், வாசுதேவநல்லூா் தங்கப்பழம் கல்விக் குழுமத்தைச் சோ்ந்த மாணவ,மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனா்.

ந.கனகசபாபதி வரவேற்க, துணைச் செயலா் இரா.கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT