முகப்பு
தென்காசி

தென்காசியில் ஆய்வுக் கூட்டத்தில் ரூ. 1.35 கோடி நலத்திட்ட உதவி

தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ரூ. 1.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ரூ. 1.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்து, 31 பேருக்கு ரூ. 1.35 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:

முதல்வா் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, அங்கு நடைபெற்றுவரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். தென்காசி மாவட்டத்தில் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, அனைத்துத் துறை அலுவலா்களும் பணிகளை விரைந்து முடித்து, தகுதிவாய்ந்த பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

ஆட்சியா் துரை. ரவிசந்திரன், எம்எல்ஏக்கள் எஸ். பழனிநாடாா் (தென்காசி), ஈ. ராஜா(சங்கரன்கோவில்), டாக்டா் தி. சதன் திருமலைக்குமாா் (வாசுதேவநல்லூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், தென்காசி நகா்மன்றத் தலைவா் சாதிா், துணைத் தலைவைா் சுப்பையா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) குருநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்து மாதவன், திமுக மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.