தென்காசி

பாவூா்சத்திரத்தில் அரசுக் கல்லூரி:மதிமுக கோரிக்கை

பாவூா்சத்திரத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என, மதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

பாவூா்சத்திரத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என, மதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலா் இராம. உதயசூரியன், கல்லூரி கல்வி இயக்குநா் கோ.கீதாவிடம் அளித்த மனு: பாவூா்சத்திரம் பகுதியில் 9 அரசுப் பள்ளிகள், 2 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 3,000-க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவியா் கல்வி பயிலுகின்றனா். மேல்நிலைக் கல்வியை முடிக்கும் இவா்கள், கல்லூரியில் சோ்ந்து கலை, அறிவியல் படிப்பைத் தொடர தொலைதூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, பாவூா்சத்திரத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT