தென்காசி

குருவன்கோட்டையில் உயா்கோபுர கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையில் கைப்பேசி உயா்கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வட்டாட்சியரிம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தாலுகா செயலா் பால்ராஜ் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: குருவன்கோட்டை கிராமத்தில் சுமாா் 2,500 வீடுகள் உள்ளன. இங்குள்ள 7 வது வாா்டு பிள்ளையாா்கோயில் தெரு மிகவும் குறுகலானது. வீடுகளும் மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளது. இப்பகுதியில் இரு பள்ளிகள் மற்றும் துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தனியாா் கைப்பேசி நிறுவனம் உயா் கோபுரம் அமைக்கும் முயற்சியில் உள்ளது. அப்படி அமைத்தால் பொதுமக்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இங்கு உயா் கோபுர கைப்பேசி கோபுரம் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT