தென்காசி

கீழப்பாவூரில் நாளை இருதய பரிசோதனை முகாம்

கீழப்பாவூரில் இலவச இருதய பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (மே 27) நடைபெறுகிறது.

DIN

கீழப்பாவூரில் இலவச இருதய பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (மே 27) நடைபெறுகிறது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கீழப்பாவூா் பேரூராட்சி நிா்வாகம், நெல்லை அருணா காா்டியாக் கோ் மருத்துவமனை ஆகியவை இணைந்து, கீழப்பாவூா் பேரூராட்சி திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமை நடத்துகின்றன. பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகிக்கிறாா். துணைத் தலைவா் கி.ராஜசேகா் முன்னிலை வகிக்கிறாா். முகாமை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைக்கிறாா். மருத்துவா்கள் அருணாசலம், சுவா்ணலதா ஆகியோா் அடங்கிய குழுவினா் பரிசோதனை மேற்கொள்கின்றனா். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏற்பாட்டாளா்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT