சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள்
சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நகரின் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தமிழ் மலா் மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பள்ளி, விண்மீன் மாற்றுத் திறனாளிகள் இல்லம், டிடிடிஏ மாற்றுத் திறனாளிகள் பள்ளி ஆகியவற்றில் உணவு வழங்கப்பட்டது. தமிழ் மலா் சிறப்புப் பள்ளியில் மாற்றுத் திறன் முதியவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகரச் செயலா் மு. பிரகாஷ், அப்பாஸ்அலி, ராமா், வீராசாமி, சுப்புத்தாய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Advertisement