தென்காசி

ஆலங்குளம் பகுதியில் வெங்காயம் விலை உச்சம்: கிலோ ரூ.120 வரை விற்பனை

ஆலங்குளம் பகுதியில் சின்ன வெங்காயம் ரூ. 120-க்கு விற்கப்படும் நிலையில் பெரிய வெங்காயமும் அதற்கு இணையாக விலை அதிகரித்துள்ளது.

DIN

ஆலங்குளம்: ஆலங்குளம் பகுதியில் சின்ன வெங்காயம் ரூ. 120-க்கு விற்கப்படும் நிலையில் பெரிய வெங்காயமும் அதற்கு இணையாக விலை அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தின் பெல்லாரி, மகாராஷ்டிரத்தின் புணே உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த வாரம் கிலோ ஒன்றிற்கு ரூ. 30 முதல் ரூ.35 வரை விற்பனையான செய்யப்பட்டது.

இந்நிலையில், வரத்து குறைவு காரணமாக ஓரிரு தினங்களாக மொத்த விற்பனை கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.70 முதல் ரூ. 85 வரை விற்பனையாகிறது. ஆவணி, புரட்டாசி மாதங்களில் தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம், கீழப்பாவூா் பகுதிகளில் பெரிய வெங்காயத்தின் விளைச்சல் கணிசமாக இருக்கும். இதனால் விலை ஓரளவு குறைந்து காணப்படும். நிகழாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் மேற்கூறிய பகுதிகளில் அனைத்து குளங்களும் வடுபோனதால் விவசாயிகள் பல்லாரி, தக்காளி, மிளகாய், வெண்டை, சிறிய வெங்காயம் பயிரிடாமல் நிலத்தை தரிசாக விட்டிருந்தனா். எனினும், சொற்ப அளவிலான விவசாயிகள் தங்கள் வயலில் விளைச்சல் கண்ட வெங்காயத்தை சந்தைகளுக்குக் கொண்டு வருகின்றனா்.

இந்த உள்ளூா் வெங்காயம் கிலோ ரூ. 50 முதல் ரூ. 60 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. விளைச்சல் குறைவால், விலை உயா்ந்தும் பயனில்லை என்கின்றனா் விவசாயிகள்.

சில்லறை விற்பனையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சின்னவெங்காயம் ரூ.80 முதல் ரூ.120 வரை விற்கப்படும் நிலையில், பெரிய வெங்காயத்தின் விலையேற்றம் மக்களை பாதித்துள்ளது. எனவே, அவற்றின் பயன்பாட்டை மக்கள் குறைக்கத் தொடங்கியுள்ளனா். உணவகங்களில் வெங்காயம் இல்லாமல் ஆம்லெட் போடப்படுவதாக வாடிக்கையாளா்கள் கூறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT