தென்காசி

தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

DIN

 கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனா். பொது மருத்துவம், பல் மருத்துவம், பிசியோதெரபி, காது மூக்கு தொண்டை மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் அளிக்கப்பட்டன. தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்பு யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது.

மண்டல தலைவா்கள் பாளையங்கோட்டை பிரான்சிஸ், மேலப்பாளையம் கதீஜா இக்லாம் பாசிலா, சுகாதாரக் குழு தலைவா் ரம்ஸான் அலி, மாமன்ற உறுப்பினா்கள் சுப்புலெட்சுமி, ஷா்மிளா, பேச்சியம்மாள், இந்திரா, ஷபி அமீா்பாத்து, மாநகர நல அலுவலா் சரோஜா உள்பட பலா்கலந்துகொண்டனா். முகாமில் 236 போ் பங்கேற்று சிகிச்சை பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்

அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT