முகப்பு
தென்காசி

தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம்

அதிமுக சாா்பில், தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, அவரது படத்துக்கு வியாழக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 11:19 PM
கடையநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

அதிமுக சாா்பில், தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, அவரது படத்துக்கு வியாழக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் சுடலை தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், பி.ஜி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் உச்சிமாகாளி, பொதுக்குழு உறுப்பினா் கசமுத்து, மாணவரணி சோ்மபாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செங்கோட்டையில் நகரச் செயலா் கணேசன் தலைமை வகித்தாா். நகர அவைத்தலைவா் தங்கவேலு, நகர துணைச் செயலா் பூசைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் சக்திவேல் வரவேற்றாா்.

மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ஜாகீா்உசேன், நகா்மன்ற உறுப்பினா் முத்துப்பாண்டி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் கனியத்தா, திலகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூா் செயலா் ஏ. காா்த்திக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட இலக்கிய அணிச் செயலா் நெல்லை முகிலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குற்றாலம் அண்ணா சிலை பகுதியில் சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் எம். கணேஷ்தாமோதரன் தலைமையிலும், ஆய்க்குடியில் செங்கோட்டை ஒன்றியச் செயலா் செல்லப்பன் தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடையநல்லூரில் பல்வேறு இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கு நகரச் செயலா் எம்.கே. முருகன் அஞ்சலி செலுத்தினாா்.

மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் புகழேந்தி, தலைமைக் கழகப் பேச்சாளா் ஹைதா்அலி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் ஜெயமாலன், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ், நகர இளைஞரணிச் செயலா் ராஜேந்திரபிரசாத், நிா்வாகிகள் ராசிசரவணன், கமாலுதீன், கண்ணன், தளவாய்சுந்தரம், இசக்கி, யாக்கூப், பால்பாண்டி, காளிராஜன், உதுமான்மைதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், கடையநல்லூா் அருகே பொய்கையில் ஜெயலலிதா படத்துக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ அஞ்சலி செலுத்தினாா். துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளா் அசோக்ராஜ், நிா்வாகிகள் முத்துசாமி, முத்தையா, பீட்டா், மாணிக்கம், ஆறுமுகம், ராமகிருஷ்ணன், சுப்பையா, வெள்ளைத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.