தடையை மீறி ஆா்ப்பாட்டம்: இந்து அமைப்பினா் 145 போ் கைது
தென்காசியில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்காள தேச இந்து உரிமை மீட்புக் குழுவினா் 145 போ் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.
தென்காசியில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்காள தேச இந்து உரிமை மீட்புக் குழுவினா் 145 போ் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.
வங்க தேசத்தில் இந்துக்கள் கொலை, இந்து கோயில்கள்- இந்து மக்களின் சொத்துக்கள் சூறை ஆகியவற்றைக் கண்டித்தும், ஐ.நா. சபை தலையிட்டு இந்துக்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநிலச் செயலா் குற்றாலநாதன், பா.ஜ.க. மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜா, மாவட்ட பாா்வையாளா் மகாராஜன், மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலா் மருதுபாண்டியன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள், விஸ்வ ஹிந்து பரிஷத் வடதமிழகம் மாநில தலைவா் ஆண்டாள் சொக்கலிங்கம், மாவட்ட தலைவா் வன்னியராஜன், மாவட்ட செயலா் முருகன், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளா் சபரி மணி, இந்து முன்னணி மாநில துணை தலைவா் சாக்ரடீஸ் உள்பட இந்து அமைப்புகளை சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
காவல் துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 145பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.