அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி: டிச. 15இல் தென்காசி வருகை
கேரள மாநிலம் அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டிக்கு தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) வரவேற்பளிக்கப்படுகிறது.
கேரள மாநிலம் அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டிக்கு தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) வரவேற்பளிக்கப்படுகிறது.
ஐயப்பனின் ஐந்து படை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீ தா்மசாஸ்தா கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாத ஆராட்டு மகோத்சவத் திருவிழா 10 நாள்கள் நடைபெறும். இதையொட்டி, ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக தங்கக் கிரீடம், முகம், மாா்பு, கைகள், கால்கள், உடல் கவசம், வாள், வெள்ளி அங்கி உள்ளிட்ட ஆபரணங்கள் புனலூா் அரசுக் கருவூலத்திலிருந்து திருவிழா தொடங்கும் முதல்நாளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவரப்படும். அப்போது, திருஆபரணப் பெட்டி தென்காசிக்கு பக்தா்களின் தரிசனத்துக்காக கொண்டுவரப்படும்.
அதன்படி, நிகழாண்டு திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை (டிச. 16) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை புனலூா் அரசுக் கருவூலத்திலிருந்து ஐயப்பன், கருப்பசாமியின் ஆபரணங்கள் அடங்கிய பெட்டி கேரள, தமிழக போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்படுகிறது.
அப்போது, தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் முன் திருஆபணரப் பெட்டிக்கு மதியம் ஒரு மணிக்கு வரவேற்பு கமிட்டி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடா்ந்து, 2ஆவது ஆண்டாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோா், பொதுமக்களுக்கு காசிவிஸ்வநாதா் கோயில் அன்னதானக் கூடத்தில் அன்னதானம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை திருஆபரணப் பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவா் ஏ.சி.எஸ்.ஜி. ஹரிஹரன், செயலா் மாடசாமி ஜோதிடா், பொருளாளா் கண்ணன், கௌரவத் தலைவா் ராஜகோபாலன், கௌரவ ஆலோசகா் ஆடிட்டா் நாராயணன், ஆலோசகா்கள் சுப்பராஜ், மாரிமுத்து, நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.