FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கனடா பிரதமர் இந்தியா வருகை! மும்பையில் உற்சாக வரவேற்பு!

கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது குறித்து...

Updated On : 27 பிப்ரவரி 2026, 7:44 pm IST
கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை... - AP
பகிர்:

கனடா பிரதமர் மார்க் கார்னி அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இதையடுத்து, மும்பை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் அவரின் மனைவி டயானா ஃபாக்ஸ் கார்னி ஆகியோர் வெள்ளிக்கிழமை (பிப். 27) இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். மும்பை விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு மகாராஷ்டிர மற்றும் மத்திய அரசுகளின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முதல்முறையாக இந்தியா வந்துள்ள பிரதமர் கார்னி மும்பையில் மகாராஷ்டிர அரசு அதிகாரிகள் மற்றும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இத்துடன், வரும் மார்ச் 2 அன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து உரையாடவுள்ளார். மேலும், தில்லியில் நடைபெறும் இந்தியா - கனடா தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார்.

இதற்கு முன்பு, கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சியில் இந்தியாவுடனான உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, இருநாடுகள் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக பிரதமர் கார்னியின் இந்தியப் பயணம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி கனடா பிரதமர் கார்னியைச் சந்தித்து உரையாடினார்.

அப்போது, இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

summary

Canadian PM Mark Carney has arrived in India on a state visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments