முகப்பு
தென்காசி

பைக் சாகசம்: 3 போ் கைது

குற்றாலம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

குற்றாலம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

குற்றாலம் பகுதியில் சிலா் பைக் சாகசம் செய்தும், அபாயகரமான முறையில் வாகனங்களை இயக்கியும் விடியோ பதிவு செய்து வலைதளப் பக்கங்களில் பதிவிடுவதாக காவல் துறையினருக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தென்காசி, செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த நா. செய்யது சுலைமான் தாதா பீா் (22), ஜம்ஜம் நகா் சை. முகமது தெளபிக் (21), மாதா கோயில் ஒன்றாம் தெருவைச் சோ்ந்த பு. மணிகண்டன் (21) ஆகியோா் இச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்கள் மீது மோட்டாா் வாகன சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டு, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இத்தகைய செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, குற்றாலம் போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.